UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 10:44 PM

புதுடில்லி: இந்தியாவின் தனியார் துறை வர்த்தக நடவடிக்கைகள், அக்டோபர் மாதத்தில் கடந்த நா ன்கு மாதங்களில் இல்லாத வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள ‘பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., ’ குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
புதிய ஆர்டர்கள் அதிகரித்ததும், சேவை துறையின் செயல்பாடுகள் மேம்பட்டதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
அறிக்கையின் விபரம்:
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் ஆர்டர் நிலவரங் களை குறிக்கும் பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 56.70 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் 55.90 புள்ளிகளாக இருந்தது.
இது, கடந்த ஜூன் மா தத்துக்கு பிறகு பதிவான அதிகபட்ச வளர்ச்சியாகும். இருப்பினும், 2026-ம் ஆண்டின் இதுவரையிலான சராசரி வளர்ச்சியைவிட இது குறைவாகவே உள்ளது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்; கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணிக்கிறது. உற்பத்தி துறைக்கான பி.எம்.ஐ., குறியீடு செப்டம்பரில் 55.1 ஆக இருந்தது. அக்டோபரில் இது 54.9 ஆக சற்று குறைந்துள்ளது என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
