UPDATED : செப் 22, 2024 07:12 AM
ADDED : செப் 22, 2024 12:57 AM

புதுடில்லி:ஸ்மார்ட்போன் பிராஸசர்கள் தயாரித்து வரும் 'குவால்காம்' நிறுவனம், கணினி 'சிப்' தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'இன்டெல்' நிறுவனத்தை கையகப்படுத்த முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், பல ஒழுங்கு முறை சிக்கல்கள் உள்ளதால், இதனை செயல்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று என கூறப்படுகிறது.
சிப் தயாரிப்பில் போட்டி அதிகரித்துள்ளதாலும், செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான சிப்களை தயாரிப்பதில் பின்தங்கியுள்ளதாலும், இன்டெல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நடப்பாண்டில் மட்டும் நிறுவனத்தின் பங்கு விலை, 60 சதவீதம் சரிந்துள்ளது.
நிறுவனத்தின் நஷ்டம் கடந்த ஜூன் காலாண்டில் கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து 10,000 பணியாளர்களை பணி நீக்க உள்ளதாக இன்டெல் தெரிவித்திருந்தது.