ADDED : ஏப் 01, 2025 07:02 AM

புதுடில்லி; ரயில்வே துறையின் சரக்கு கையாளுகை வருவாய், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்த ரயில்வேயின் சரக்கு கையாளுகை வருவாய், 2023 - 24ம் நிதியாண்டில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 55,000 கோடி ரூபாயும்; 48 சதவீதமும் வருவாய் அதிகரித்து உள்ளது.
கொரோனா காலகட்டத்தின் போது சாலைப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால், அதிகப்படியான பொருட்கள் ரயில் மார்க்கமாகவே அனுப்பப்பட்டது.
இதன் பிறகு சரக்கு கையாளுகை வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணியர் வாயிலான வருவாயை பொறுத்தவரை, கடந்த 2019 - 20ல் 50,700 கோடி ரூபாயிலிருந்து 2023 - 24ல் 70,700 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.