ADDED : நவ 02, 2025 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:  மத்திய சுரங்க அமைச்சகம், தேசிய அரிய வகை தாதுக்கள் திட்டத்தின் கீழ் பெங்களூரு 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்' கல்வி நிறுவனத்தை திறன் மையமாக அங்கீகரித்துள்ளது.
இந்த புதிய திறன் மையத்தில், கனிமங்களை ஆராய்வது, பிரித்தெடுப்பது, பதப்படுத்துவது மற்றும் மறுசுழற்சி செய்வது என அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளுக்கு தேவையான, அரிய வகை கனிமங்கள் உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்பு நிலையை வலுப்படுத்துவதற்காக, தேசிய அரிய வகை தாதுக்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு 16,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

