உள்ளடக்கத்திற்கு செல்ல
ஏ.ஐ., கணினி சேவைக்கு நிறுவனங்களை தேர்வு செய்ய விதிகள் தளர்வு
ஏ.ஐ., கணினி சேவைக்கு நிறுவனங்களை தேர்வு செய்ய விதிகள் தளர்வு
UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 05:27 PM
அ நிறம் | அளவு
மத்திய அரசின் 'இந்தியா ஏ.ஐ.,' திட்டத்துக்காக, மேலும் 10,000 ஜி.பி.யு., சாதனங்களின் கணினி செயலாக்க சேவைகளை பெறுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஏ.ஐ., தொழில்நுட்பங்களை உருவாக்க அதிக திறன் கொண்ட கணினிகள் தேவைப்படுகின்றன. இதற்காக, ஜி.பி.யு., சாதனங்களை வைத்துள்ள தரவு மைய நிறுவனங்களிடம் இருந்து கணினி செயலாக்க சேவைகளை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசின் 'சி-டாக்' அமைப்பு மேற்கொண்டு வருகிறது.தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலான சாதனங்கள் வைத்துள்ள நிறுவனங்களும் இந்த தேர்வில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
