தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘அல்கலைன் பேட்டரி’களுக்கு அதிகரித்து வரும் தேவை உற்பத்தியில் மீண்டும் வளர்ச்சி

‘அல்கலைன் பேட்டரி’களுக்கு அதிகரித்து வரும் தேவை உற்பத்தியில் மீண்டும் வளர்ச்சி

‘அல்கலைன் பேட்டரி’களுக்கு அதிகரித்து வரும் தேவை உற்பத்தியில் மீண்டும் வளர்ச்சி


UPDATED : நவ 18, 2026 04:48 PM

ADDED : நவ 18, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 04:48 PM ADDED : நவ 18, 2026 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில், உலர் மின்கலன்கள் எனப்படும் ‘டிரை செல்’ பேட்டரிகளின் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 3.60 சதவீதம் அதிகரிக்கும் என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ., கணித்துள்ளது.

இதுகுறித்து, அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பேட்டரி சந்தையில், ஜிங்க் கார்பன் பேட்டரிகள் அதிக பங்கு வகிக்கின்றன. கடிகாரம், ரிமோட், டார்ச் லைட் உள்ளிட்டவற்றில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

அதேநேரம், டிஜிட்டல் கேமரா, விளையாட்டு பொம்மைகள், பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அல்கலைன் பேட்டரிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. சாதாரண ஜிங்க் கார்பன் பேட்டரிகளை விட, அல்கலைன் பேட்டரிகள் அதிக ஆற்றல் கொண்டவை என்பதுடன், நீண்ட நேரம் செயல்படக்கூடியவை. நகரமயமாக்கல், மக்களின் வருமான உயர்வு, மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவை இவற்றுக்கான சந்தை வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளன.கடந்த நிதியாண்டில் பேட்டரி துறையின் விற்பனை வருவாய் 5 சதவீதம் அதிகரித்தது. விலை உயர்வு மற்றும் அல்கலைன் பேட்டரிகளுக்கான தேவை காரணமாக, நடப்பு டிசம்பர் காலாண்டிலும் வருவாய் வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மக்கள் பேட்டரியில் இயங்கும் சாதனங்களை புதிதாக வாங்குவதையும், பழைய பேட்டரிகளை மாற்றுவதையும் தள்ளிப்போட வாய்ப்புள்ளது. இது, பேட்டரி விற்பனை வளர்ச்சிக்கு தடையாக அமையலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை பங்கு

விபரம் : சதவீதம்

ஜிங்க் கார்பன் பேட்டரிகள் : 85

அல்கலைன் பேட்டரிகள் : 15

மொத்த நுகர்வில் இறக்குமதி பங்கு : 52.90

இறக்குமதியில் சீனாவின் பங்கு : 75 <

உற்பத்தி நிலவரம்

நிதியாண்டு : எண்ணிக்கை (கோடியில்)

2024–25 : 149.11

2025–26 : 142.55

2026–27* : 147.62

:

*கணிப்பு :

உள்நாட்டு உற்பத்தி


36 கோடி
ஆண்டு உற்பத்தி திறன்
ஜம்முவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில், ‘எவரெடி’ நிறுவனம் அல்கலைன் பேட்டரி ஆலையை அமைத்துள்ளது. கடந்த மே மாதம் உற்பத்தியை துவங்கிய இந்த ஆலையால், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். இதன் வாயிலாக, அல்கலைன் பேட்டரிகளுக்கு சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சார்ந்திருப்பது குறைய வாய்ப்புள்ளது.



மறுசுழற்சி சவால்


2022
மறுசுழற்சி விதிகள் அறிமுகம்
பழைய பேட்டரிகளை சேகரித்து, மறுசுழற்சி செய்வது உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் பொறுப்பாகும். போதிய சேகரிப்பு வசதிகள் இல்லாததுடன், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் உற்பத்தியில் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் உள்ளன. இதனால், நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படலாம்.



மூலப்பொருள் விலை


31.50%
துத்தநாகம் விலை உயர்வு
பேட்டரி தயாரிப்புக்கான மூலப்பொருள் செலவில், துத்தநாகத்தின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. நடப்பாண்டு ஏப்., முதல் அக்., வரை இதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், பேட்டரி விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்தால், பேட்டரி விலை மீண்டும் உயர்த்தப்படலாம்.



Synop: Top


- நடப்பு நிதியாண்டில் பேட்டரி உற்பத்தி 3.60 சதவீதம் உயரும் என கணிப்பு.
- அல்கலைன் பேட்டரிகளுக்கான தேவை அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்திக்கு வாய்ப்பு.
- மூலப்பொருள் விலை உயர்வால் பேட்டரிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம்.
- பருவமழை பற்றாக்குறையால் கிராமப்புறங்களில் விற்பனை பாதிக்கப்படலாம்.



அல்கலைன் பேட்டரி


துத்தநாகம், மாங்கனீஸ் டை ஆக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பேட்டரி வகையாகும். சாதாரண ஜிங்க் கார்பன் பேட்டரிகளை விட அதிக ஆற்றல் கொண்டது; நீண்ட நேரம் செயல்படும் திறன் உடையது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us