வடகிழக்கு மாநில வளர்ச்சி திட்டங்கள் ரூ.5,700 கோடி நிதி ஒதுக்கீடு: சிந்தியா
வடகிழக்கு மாநில வளர்ச்சி திட்டங்கள் ரூ.5,700 கோடி நிதி ஒதுக்கீடு: சிந்தியா
ADDED : டிச 05, 2025 02:06 AM

புதுடில்லி : மத்திய அரசின் பி.எம்., டிவைன் திட்டத்தின்கீழ், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு 5,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு, வடகிழக்கு மாநிலங்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் பயன் தரக்கூடிய வளர்ச்சி திட்டங்களை வழங்க உறுதி பூண்டுள்ளது. இப்பகுதியின் அடிப்படை கட்டுமானம் மற்றும் சமூக -பொருளாதார மேம்பாட்டுக்கு, பி.எம்., டிவைன் திட்டம் துாண்டுகோலாக அமைந்துள்ளது.
இத்திட்டத்துக்கு 2022 - -23 முதல் 2025- - 26 வரையிலான காலகட்டத்துக்கு 6,600 கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட ப்பட்டது.
இவ்வாண்டு அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி 5,700 கோடி ரூபாய் செலவில் 44 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதில், 176 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 5,500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டங்கள் உலகத்தரத்தில் அமைக்கப்படும்
சுற்றுலாவை மேம்படுத்த, இடங்கள் மாநில அரசுகளின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன
துவக்க கட்டமாக மேகாலயாவின் ஷோஹ்ரா சர்க்யூட், திரிபுராவின் மாதாபாரி சர்க்யூட் சாலைகள் மேம்படுத்தப்படும்
சுற்றுலா துறையில் திறமையானவர்களை இனம் காணவும் இத்திட்டங்கள் உதவும்.

