ADDED : ஜன 11, 2024 11:55 PM

புதுடில்லி:'எதிரி சொத்துகள்' எனப்படும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், சீனாவின் குடிமை பெற்றுச் சென்ற தனி நபர்களுடைய சொத்துக்களின் பங்குகளை விற்கும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.
கடந்த 1947 முதல் 1962ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடம் பெயர்ந்த தனி நபர்களின் சொத்துக்கள் 'எதிரி சொத்துக்கள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த வகையில், 84 நிறுவனங்களைச் சேர்ந்த 2.91 லட்சத்துக்கும் அதிகமான எதிரி சொத்து பங்குகளை, தனி நபர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்க அரசு திட்டமிட்டு உள்ளது.
வருகிற பிப்ரவரி 8ம் தேதிக்குள், தனிநபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தகுதிவாய்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உட்பட 10 பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஏலத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 84 நிறுவனங்களின் 2.91 லட்சம் பங்குகளில் முதற்கட்டமாக 20 நிறுவனங்களின் 1.88 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.