ADDED : அக் 13, 2024 03:07 AM

மும்பை,:சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் விண்ணப்பித்த அன்றே கடன் தொகை கிடைப்பதை உறுதி செய்யுமாறு நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ரிசர்வ் வங்கி வலியுறுத்திஉள்ளது.
நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை கடைக்காரர்களுக்கு கடன் வழங்குகின்றன.
எனினும், இந்த பிரிவினருக்கு உடனடி கடன் தேவை உள்ள நிலையில், விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் தொகையை வினியோகிக்க நிறுவனங்கள், கூடுதல் காலம் எடுத்துக் கொள்கின்றன.
எனவே, ஒரே நாளில் சிறு வியாபாரிகள், நடைபாதை கடைக்காரர்களுக்கு கடன் கிடைப்பதற்கான நடைமுறை இதுவரை இல்லை.
தினசரி தவணையாக திருப்பிச் செலுத்தும் வகையிலான இத்தகைய கடன்களில், சீராக கடனை திருப்பிச் செலுத்தும் வரலாறு வியாபாரிகள், நடைபாதைக் கடைக்காரர்களிடம் இல்லை என்று நிதி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கை ஒன்றில், சிறு வியாபாரிகள், நடைபாதை கடைக்காரர்களுக்கு விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கவும் 24
மணி நேரத்தில் திரும்பப் பெறவும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க
தன் நிதி தொழில்நுட்பப் பிரிவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.