செயற்கைக்கோள் வழி இணைய சேவை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி
செயற்கைக்கோள் வழி இணைய சேவை ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி
ADDED : மே 09, 2025 12:10 AM

புதுடில்லி:இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குவதற்கு, எலான் மஸ்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய அரசு பூர்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. அரசிடம் இருந்து உரிமத்தை பெற்ற பிறகு, இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயல்பாடுகளை துவங்கலாம்.
நாட்டின் செயற்கைக்கோள் இணைய சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியார் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023ல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது. இதையடுத்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஏற்கனவே, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், ஸ்டார்லிங்க், குய்பர் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் அளித்தது.
இணைய வசதி சென்று சேராத நாட்டின் தொலை துார பகுதிகளில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை உதவியாக இருக்கும்
மோசமான வானிலை மற்றும் அவசர கால சூழலிலும் தடையற்ற இணைய சேவை கிடைப்பதை இது உறுதி செய்கிறது.
உரிமம் பெறாத காரணத்தால், இந்தியாவில் 'சாட்காம்' சேவைக்கான முன்பதிவுகளை நிறுத்த ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு
இந்திய விண்வெளி கொள்கை அறிமுகம்
டிராய், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை
தரை வழி மற்றும் 'சாட்காம்' சேவை நிறுவனங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த, டிராய் தலைவருக்கு ரிலையன்ஸ் ஜியோ கடிதம்
சாட்காம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையை பின்பற்ற, ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல் வலியுறுத்தல்
ஏல முறை இதற்கு பொருந்தாது எனக் கூறி, மிட்டலின் கோரிக்கையை நிராகரித்தார், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஏலத்தை எதிர்த்த அமைச்சர் சிந்தியாவுக்கு, எலான் மஸ்க் நன்றி தெரிவித்தார்
டிராய் நடத்திய கூட்டத்தில், ஜியோ, பார்தி ஏர்டெல் ஒன்றிணைந்து, செயற்கைக்கோள் நிறுவனங்களின் கோரிக்கைகளை எதிர்த்தன
ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்க, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஒப்பந்தம். பேச்சு நடத்தி வருவதாக வோடபோன் ஐடியா அறிவிப்பு
சட்ட ரீதியான இடைமறித்தல் வசதி கட்டாயம்; இந்தியாவில் சேகரிக்கப்படும் தரவுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என்ற விதியை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு
தொலைத்தொடர்பு துறை, ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு சாட்காம் சேவை வழங்குவதற்கான அனுமதி கடிதத்தை அனுப்பியது.