கப்பல் கட்டுமான ஆர்டர்கள் ரூ.16,150 கோடியை தாண்டின
கப்பல் கட்டுமான ஆர்டர்கள் ரூ.16,150 கோடியை தாண்டின
UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 11:06 PM

புதுடில்லி: இந்தியாவின் தற்போதைய கப்பல் கட்டுமான ஆர்டரின் மொத்த மதிப்பு 16,150 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அ மைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நம் நாட்டு கப்பல் கட்டும் தளங்களில், 150க்கும் அதிகமான கப்பல்களுக்கான ஆர்டர்கள் கைவசம் உள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு 16,150 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்கள் ஆகும். உள்நாட்டு உற்பத்தி திறன் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 45 லட்சம் டன் கொள்ளளவு கப்பல் கட்டுமான திறனை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழகம், உள்ளிட்ட மாநில அரசுகளுடன் இணைந்து, ஐந்து புதிய கப்பல் கட்டுமான தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 45 லட்சம் டன் கொள்ளளவு கப்பல் கட்டுமான திறனை உருவாக்க, தமிழகம், ஆந்திரா, குஜராத், மஹாராஷ்டிரா, மற்றும் ஒடிஷா அரசுகளுடன் இணைந்து, ஐந்து புதிய கப்பல் கட்டுமான தொகுப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
