UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 11:06 PM

புதுடில்லி: கடந்த அக்டோபரில் தொடங்கிய நடப்பு 2026 – 27 சர்க்கரை அரவை பருவத்தில், நவ., 15ம் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி இருமடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கமான ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 11.49 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, நடப்பாண்டில் 23.59 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கரும்பு அரவை பணிகள் முன்கூட்டியே துவங்கியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தில் நாடு முழுதும் 313 சர்க்கரை ஆலைகளில் அரவை பணிகள் துவங்கியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 311 ஆலைகளில் அரவை நடைபெற்றது.
உற்பத்தி விபரம் (லட்சம் டன்னில்)
மகாராஷ்டிராவில் : 18.51
உ.பி., : 2.10
கர்நாடகா : 1.40
தமிழகம் : 0.74
குஜராத் : 0.62
