ஸ்ரீராம் குழுமத்தில் இருந்து 'ஸ்ரீராம் வெல்த்' துவக்கம்
ஸ்ரீராம் குழுமத்தில் இருந்து 'ஸ்ரீராம் வெல்த்' துவக்கம்
ADDED : ஜூன் 21, 2025 01:13 AM

சென்னை:நிதிச் சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்ரீராம் குழுமம், 'ஸ்ரீராம் வெல்த்' என்ற புதிய நிறுவனத்தை துவக்கியுள்ளது. இதை, தென் ஆப்ரிக்காவின் நிதிச்சேவை நிறுவனமான சன்லாம் குழுமத்துடன் இணைந்து நடத்த உள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீராம் வெல்த் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான விகாஸ் சடிஜா கூறியதாவது:
முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான முதலீட்டு ஆலோசனைகளையும் ஸ்ரீராம் வெல்த் வழங்கும். வாடிக்கையாளர்களின் செல்வத்தை பன்மடங்கு பெருக்குவதோடு, தொடர்ந்து அது மதிப்பு மிகுந்ததாக இருக்கும்படி செய்யும்.
இதற்காக, ஏ.ஐ., உட்பட பல்வேறு சேவைகள் வாயிலாக, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்ற ஆலோசனை வழங்கப்படும்.
தற்போது, 2 கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். அடுத்த ஆறு மாதங்களில், 10 லட்சம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்,மொத்தம் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு ஆலோசனைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.