தாறுமாறாக உயரும் வெள்ளி விலை; தொழிற்சாலைகளில் தேவை அதிகரிப்பு
தாறுமாறாக உயரும் வெள்ளி விலை; தொழிற்சாலைகளில் தேவை அதிகரிப்பு
UPDATED : ஜூலை 15, 2025 07:13 AM
ADDED : ஜூலை 15, 2025 06:13 AM

சென்னை: கடந்த ஆறு மாதங்களில் கிராமுக்கு, 29 ரூபாய் அதிகரித்துள்ளது. மின் வாகனம், சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து தேவை உயர்ந்துள்ளதால், விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மொத்த வெள்ளி உற்பத்தியில் தொழிற்சாலைகளின் தேவை, 80 சதவீதமாகவும், ஆபரணம் உள்ளிட்ட மற்ற பயன்பாட்டிற்கான தேவை 20 சதவீதமாகவும் உள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 1ல், 98 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, எப்போதும் இல்லாத வகையில் நேற்று, 127 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களில் கிராமுக்கு, 29 ரூபாய் உயர்ந்துள்ளது.
எங்கு அதிக தேவை?
மின்னணு பொருட்கள்: ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட், சர்க்யூட், ஸ்விட்ச், பேட்டரி
பசுமை மின்சாரம்: சோலார் பேனல், சோலார் செல்வாகனம்: கார் பேட்டரி, மின்சார உதிரி பாகங்கள்
மருத்துவம்: பேண்டேஜ், டிரஸ்ஸிங் பொருட்கள், மருத்துவ கருவிகள்
மற்றவை: கண்ணாடி, சால்ட்ரிங், அலாய், தனித்துவ அச்சு மை
உலகளவிலும் அதிகரிப்பு
மிக வேக மின் கடத்தியாக வெள்ளி உள்ளது. இதனால் மின் வாகனம், எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி சாதன உதிரி பாகங்கள், சூரியசக்தி மின் சாதனங்கள் போன்ற தொழில்களில் அதிகளவில் வெள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி, மின் வாகனங்கள், பொருட்களின் தேவை அதிகரிப்பால், இங்கு மட்டுமின்றி உலகளவிலும் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது.
- ஜெயந்திலால் சலானி, தலைவர், சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம்