திருச்சி திருவெறும்பூரில் 'சிப்காட்' தொழில் பூங்கா
திருச்சி திருவெறும்பூரில் 'சிப்காட்' தொழில் பூங்கா
ADDED : அக் 08, 2025 12:43 AM

சென்னை:திருச்சி திருவெறும்பூரில் அமைக்கப்பட உள்ள தொழில் பூங்காவை, மாநில நெடுஞ்சாலையுடன் இணைக்க, 1.38 கோடி ரூபாயில் அணுகு சாலை அமைக்கும் பணிக்கு, 'சிப்காட்' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், 138 ஏக்கரில் மாபெரும் உணவு பூங்காவை, 'சிப்காட்' அமைத்துள்ளது. அங்கு, உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, திருவெறும்பூரில் எலந்தப்பட்டி மற்றும் சூரியலுார் கிராமங்களில், 150 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 225 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 3,000 வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, 1.38 கோடி ரூபாயில் திருவெறும்பூர் - சூரியூர் சாலையில் இருந்து, திருவெறும்பூர் தொழில் பூங்கா அமைக்கப்படும் இடம் வரை அணுகு சாலை அமைக்க, சிப்காட் 'டெண்டர்' கோரியுள்ளது.