திறன்மிகு வேலைவாய்ப்பை உருவாக்க 'சிப்காட்' முயற்சி
திறன்மிகு வேலைவாய்ப்பை உருவாக்க 'சிப்காட்' முயற்சி
ADDED : மே 22, 2025 11:47 PM

சென்னை:உயர் கல்வி படிக்கும் போதே திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கவும்; தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை சேர்த்த பின் பயிற்சிக்கு செலவு செய்வதை குறைக்கவும், திறன்மிகு பணியாளர்களை உருவாக்கும் நடவடிக்கையில், தமிழக அரசின் 'சிப்காட்' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழக உயர் கல்வி மன்றத்துடன் இணைந்து, தொழில் நிறுவனங்கள் வாயிலாக, திறன் மேம்பாட்டிற்கான ஆற்றலை கண்டறியும் கூட்டத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள புத்தாக்க மையத்தில் நேற்று நடத்தியது.
இதில், சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், தமிழக உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து சிப்காட் தொழில் பூங்காக்களில் இருந்து, 100 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேவைப்படும் பாடத்திட்டங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் பெறப்பட்டன.
ஆர்வம் உள்ள மாணவர்களை படிக்கும் போதே கண்டறிந்து, தொழில் பயிற்சிகள் வழங்கப்படும்
'செல்ப் பேஸ்ட் மாடல்ஸ்' எனப்படும் சுயந்தேறல் வாயிலாக பாடத்திட்டம் வடிவமைப்பு
மாணவர்கள் முதலாம் ஆண்டு இறுதியில் விருப்பமான பிரிவை தேர்வு செய்து, அதில் நிலையான மதிப்பீட்டை பெறலாம்
விருப்ப பிரிவு தேர்வால், மாணவர்கள் 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சியில் பங்கு பெறும் வாய்ப்பை பெறுவர்
காஞ்சிபுரத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, மதுரையில் கூட்டம் நடத்த சிப்காட் முடிவு.