சோலார் மூலப்பொருள் உற்பத்தி டாடா பவர் தொழிற்சாலை
சோலார் மூலப்பொருள் உற்பத்தி டாடா பவர் தொழிற்சாலை
ADDED : நவ 12, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டா டா பவர் நிறுவனம், சூரிய மின்உற்பத்திக்கான, சோலார் செல் உற்பத்தியில் அடிப்படை மூலப்பொருட் களான வேபர் மற்றும் இன்காட் ஆகியவற்றை தயாரிக்கும் ஆலையை நிறுவ உள்ளது. நாட்டிலேயே இத்துறையில் மிகப்பெரிய ஆலையாக இருக்கக்கூடிய இது, 10 ஜிகாவாட் திறனுள்ளதாக அமையும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரவீர் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலை அமைவிடம் மற்றும் பயன்படுத்தப்பட உள்ள தொழில்நுட்பம் ஆகியவை முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் சின்ஹா கூறியுள்ளார். மத்திய அரசு, சோலார் மாட்யூல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தொழில் து றையை ஊக்குவித்து வருகிறது.

