எல்லையில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் சோலார், காற்றாலை திட்டங்களுக்கு தடை
எல்லையில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் சோலார், காற்றாலை திட்டங்களுக்கு தடை
ADDED : ஆக 09, 2026 03:18 AM

புதுடில்லி: தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சர்வதேச எல்லைகளில் இருந்து 1 கி.மீ., சுற்றளவுக்குள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகி ஸ்தானுடனான கட்டுப்பாட்டு எல்லை, சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லை மற்றும் சர்வதேச எல்லைகளில் இருந்து 1 கி.மீ., பகுதிக்குள் சூரிய மின் உற்பத் தி நிலையங்கள், காற்றாலைகள், இரண்டும் சேர்ந்த கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகள் போன்ற எந்த திட்ட பணிகளுக்கும் அனுமதி கிடையாது.
மேலும், எல்லையை ஒட்டிய நாடுகளை சேர்ந்த, குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனாவை சேர்ந்த பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை திட்ட பணிகளி ல் ஈடுபடுத்தவும் மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.
சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு எல்லைகளில் இருந்து 1 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ., வரையிலான பகுதிகளில் அமைக்கப் படும் அனைத்து சூரிய மின் ஆலைகள், காற்றாலைகள் மற்றும் கலப்பு எரிசக்தி திட்டங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அ னுமதி பெறுவது கட்டாயமாகும்.
இவ்வாறு கூறப்பட் டுள்ளது.
1 முதல் 50 கி.மீ., வரையிலான பகுதிகளில் திட்டங்களுக்கு பாதுகாப்பு அனுமதியும், 1 முதல் 20 கி.மீ., வரையிலான பகுதிகளில் பாதுகாப்பு அனுமதியுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லா சான்றும் பெற வேண்டும்.
