ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.100 கோடி கோவை மாநாட்டில் வாய்ப்பு 'ஐடியா'வை சொல்லி முதலீட்டை அள்ளலாம்
ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.100 கோடி கோவை மாநாட்டில் வாய்ப்பு 'ஐடியா'வை சொல்லி முதலீட்டை அள்ளலாம்
ADDED : அக் 05, 2025 10:15 PM

கோவை:கோவையில் வரும் 9,10ம் தேதிகளில் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் குறைந்தபட்சம்100 கோடி ரூபாய் முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், புதிய தொழில்முனைவோருக்கும், தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கும் முதலீட்டை ஈர்க்க சிறந்த வாய்ப்பு உருவாகிஉள்ளது
'இதுதொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
இம்மாநாட்டில், 100க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். புதிதாக ஸ்டார்ட்அப் துவங்க விரும்புவோர், புரோட்டோடைப் வைத்துள்ளவர்கள், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த விரும்புவோர், இந்த முதலீட்டாளர்களிடம் தங்களின் தொழில்முனைவு ஐடியாவை முன்வைக்கலாம்.
அது, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பட்சத்தில், அவர்கள் முதலீடு செய்வர்.
வாய்ப்பு 100 முதலீட்டாளர்களும், குறைந்தது தலா 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளனர். இதனால், 500 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிறுவனங்கள், குறைந்தது 100 ரூபாய் கோடி முதலீடு செய்ய உத்தரவாதம் அளித்துள்ளன. சர்வதேச முதலீட்டாளர்களும் பங்கேற்பதால், முதலீட்டுத் தொகை அதிகமாக வாய்ப்பு உள்ளது.
'டி.என்., ஸ்டார்ட்அப்' 'டி.என்., ஸ்டார்ட்அப்' சார்பில், ஏற்கனவே உள்ள ஸ்டார்ட்அப்களில், விரிவாக்கத்துக்கு தயாராக உள்ள நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலுார், தஞ்சாவூர், கோவை, திருச்சி, துாத்துக்குடியில் 'டி.என்., ஸ்டார்ட்அப்' மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களையும் அணுகலாம். முதலீட்டாளர்களை உங்களின் 'ஐடியா' ஈர்க்க வேண்டும்; அவ்வளவுதான்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
யாருக்கு@@ வாய்ப்பு?
வாய்ப்பு?
டீப் டெக், ஏ.ஐ., டெக், அக்ரி டெக், ஸ்பேஸ் டெக், ஹெல்த்டெக், கிளைமேட் டெக், லைப் சயின்சஸ் டெக், ரூரல் லைவ்லிகுட் உள்ளிட்ட பிரிவுகளைச் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.