தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மாநில செய்திகள்

மாநில செய்திகள்

மாநில செய்திகள்


UPDATED : நவ 14, 2026 04:04 PM

ADDED : நவ 14, 2026 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 04:04 PM ADDED : நவ 14, 2026 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரளா



நட்சத்திர அந்தஸ்து இல்லை என்றால்



பார் உரிமம் கிடையாது



மத்திய சுற்றுலா அமைச்சகம் நட்சத்திர அந்தஸ்து வழங்க மறுத்த ஓட்டல்களின் பார் உரிமம் புதுப்பிக்கப்படாது என, கேரள கலால் துறை அமைச்சர் எம்.லிஜு தெரிவித்துள்ளார்.

இதனால், பார் வசதியுள்ள ஓட்டல்கள் நட்சத்திர அந்தஸ்தை முறையாக புதுப்பிப்பது அவசியமாகியுள்ளது. விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதற்கும், நிராகரிக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளது. நிராகரிக்கப்பட்ட ஓட்டல்களுக்கு உரிமம் வழங்குவதை அரசு ஆதரிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்



புதிய ஹோம்ஸ்டேக்களுக்கு



ரூ.5 லட்சம் வரை மானியம்



கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 27 கி.மீ., கடற்கரை பகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்த மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இப்பகுதியில் தேர்வு செய்யப்படும் சுற்றுலா தலங்களில், புதிதாக நான்கு அறைகள் கொண்ட ஹோம்ஸ்டே அமைப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் உள்ளூர் சுற்றுலா சேவைகளுக்கு தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

ஹரியானா



டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு



தனித்தனி பதிவு கட்டாயம்



வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க, ஹரியானாவில் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கான புதிய பதிவு விதிகளுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு அலுவலகம், கிளை மற்றும் பாஸ்போர்ட், சுற்றுலா, கல்வி விசா ஆலோசனை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பதிவு அவசியம்.

சேவை பிரிவு ஒன்றுக்கு 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு சான்றிதழ் மூன்றாண்டுகள் செல்லுபடியாகும்.

நாகாலாந்து



சுற்றுலாவுக்கு ஆண்டு முழுதும்



அனுமதிக்க கோரிக்கை



வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி கட்டுப்பாட்டில் இருந்து, நாகாலாந்துக்கு ஆண்டு முழுதும் விலக்கு அளிக்க வேண்டும் என, அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ மத்திய அரசிடம் கோரியுள்ளார்.தற்போது டிச.1 முதல் 10 வரை வழங்கப்படும் தளர்வு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.கோரிக்கை ஏற்கப்பட்டால், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஆண்டு முழுதும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க வாய்ப்பு உருவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us