தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மாநில செய்திகள்

மாநில செய்திகள்

மாநில செய்திகள்


UPDATED : நவ 16, 2026 04:26 PM

ADDED : நவ 16, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 04:26 PM ADDED : நவ 16, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹரியானா



மாசு கட்டுப்பாட்டால் தொழில்கள் பாதிப்பு



குருகிராமில் காற்று மாசுபாட்டை குறைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் ஜெனரேட்டர் பயன்பாடு மற்றும் வாகன போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளால், சரக்கு வினியோகத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. குருகிராம் – மானேசர் தொழில் பகுதியில் 40 முதல் 50 சதவீத தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத்



சூரிய மின்தகடு மறுசுழற்சிக்கு ஆலை



குஜராத்தில் 2030ம் ஆண்டுக்குள் 11,528 டன் சூரிய மின்தகடு கழிவுகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நிறுவனத்துடன் இணைந்து, கச் பகுதியில் 40 கோடி ரூபாய் முதலீட்டில் மறுசுழற்சி ஆலை அமைக்க கோசோல் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு 6,000 மின்தகடுகளை மறுசுழற்சி செய்யும் வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்



ரப்பர், பிளாஸ்டிக் துறையில் முதலீடு



மத்திய பிரதேசத்தில் ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி துறைகளில் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான 105 புதிய திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்துார், பிதாம்பூர், தார் பகுதிகளில் 1,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாநிலத்தில் இத்துறைகளை சேர்ந்த 396 பதிவு செய்யப்பட்ட ஆலைகள் உள்ளன.

ஆந்திர பிரதேசம்



புகையிலை விலை சரிவால் பாதிப்பு



ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் புயல் பாதிப்புடன், புகையிலை விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறைந்த தர புகையிலைக்கு கிலோ 110 ரூபாய் வழங்க முதல்வர் அறிவுறுத்திய நிலையில், 90 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கிடங்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பால் கொள்முதல் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us