பங்கு சந்தை நிலவரம் : வர்த்தக பேச்சு முறிவால் சரிவு
பங்கு சந்தை நிலவரம் : வர்த்தக பேச்சு முறிவால் சரிவு
UPDATED : ஆக 09, 2025 08:47 AM
ADDED : ஆக 09, 2025 01:08 AM

வர்த்தக பேச்சு முறிவால் சரிவு
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன. அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம், தொடர்ச்சியாக
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது,
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.
இதனிடையே,
இப்போதைக்கு இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சு தொடர வாய்ப்பில்லை
என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நம்பிக்கையை இழந்த
முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர். இதன் தாக்கத்தால், நேற்று
நாள் முழுதும் சந்தை குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின.
நேற்றைய
வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 847 புள்ளிகள் வரை சரிவை கண்டது.
முடிவில், நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் இறக்கத்துடன் வணிகத்தை நிறைவு
செய்தன.
உலக சந்தைகள்
வியாழனன்று அமெரிக்க
சந்தைகள் கலவையாக முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி
உயர்வுடனும்; தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின்
ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள்
ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
* அமெரிக்க வரி விதிப்பின் எதிர்மறை தாக்கம்
* தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள்1,933 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.59 சதவீதம் அதிகரித்து, 66.82 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பைசா 13 பைசா குறைந்து, 87.71 ரூபாயாக இருந்தது.
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
என்.டி.பி.சி., 1.59
டைட்டன் 1.49
டாக்டர் ரெட்டீஸ் 1.18
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
இண்டஸ்இண்ட் வங்கி 3.32
பார்தி ஏர்டெல் 3.28
அதானி என்டர்பிரைசஸ் 3.15
நிப்டி: 24,363.30
மாற்றம்: 232.85 இறக்கம் சிவப்பு
சென்செக்ஸ்: 79,857.79
மாற்றம்: 765.47 இறக்கம் சிவப்பு