ADDED : ஜூலை 11, 2025 12:02 AM

அதிக பங்கு விற்பனையால் சரிவு
வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன. சீராக அன்னிய முதலீடுகள் வரத்து, உலகளாவிய சந்தை
போக்குகளில் ஏற்றம் காணப்பட்ட போதிலும், அதற்கு மாறாக, நேற்று இந்திய
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் துவங்கின.
தொடர்ந்து,
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தாமதம், நிறுவனங்களின் காலாண்டு
முடிவுகள் பிற்பகலில் வெளிவர துவங்கிய நிலையில், முதலீட்டாளர்கள்
முன்னெச்சரிக்கையுடன் சந்தையை அணுகினர். மேலும், ஐ.டி., டெலிகாம் பங்குகளை
அதிகளவில் விற்பனை செய்தனர்.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான
டிரம்பின் எச்சரிக்கையும், சந்தையை பதம் பார்த்தன. இதனால், நாள் முழுதும்
சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின. இரண்டாவது நாளாக நிப்டி,
சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்தன.
உலக சந்தைகள்
புதனன்று
அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை,
ஜப்பானின் நிக்கி சரிவுடனும்; தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின்
ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்
முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
நிப்டி: 25,355.25
மாற்றம்: 120.85 இறக்கம் சிவப்பு
சென்செக்ஸ்: 83,190.28
மாற்றம்: 345.80 இறக்கம் சிவப்பு
சரிவுக்கு காரணங்கள்
* நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளால் ஏற்பட்ட முன்னெச்சரிக்கை
* ஐ.டி., டெலிகாம் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு விற்கப்பட்டது
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
இண்டஸ்இண்ட் வங்கி 1.56
மாருதி 1.40
டாடா ஸ்டீல் 1.03
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
பார்தி ஏர்டெல் 2.76
ஏசியன் பெயின்ட்ஸ் 2.06
எச்.டி.எப்.சி.,லைப் 2.05
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் ___ கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று ___ இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.27 சதவீதம் குறைந்து,70 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா உயர்ந்து, 85.69 ரூபாயாக இருந்தது.

