பங்குச்சந்தை நிலவரம் : மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்
பங்குச்சந்தை நிலவரம் : மாற்றம் இல்லாததால் ஏமாற்றம்
UPDATED : ஆக 07, 2025 06:56 AM
ADDED : ஆக 07, 2025 02:51 AM

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தொடர்பான எதிர்பார்ப்பால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சிறிய உயர்வுடன் துவங்கின.
இருப்பினும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ., அறிவித்ததை தொடர்ந்து ஐ.டி., மருந்து துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றனர். மேலும், அமெரிக்க வரி விதிப்பின் எதிர்மறை தாக்கம் நீடிப்பதால், நேற்று நாள் முழுதும் சந்தையில் தள்ளாட்டம் காணப்பட்டது.
முடிவில், நிப்டி, சென்செக்ஸ் இறக்கம் கண்டன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவடைந்தன.
உலக சந்தைகள்
செவ்வாயன்று
அமெரிக்கச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய
சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹேங்சேங்
மற்றும் சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்;
தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு கலவையாகவும் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
1 ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என ஆர்.பி.ஐ., அறிவிப்பு
2ஐ.டி., மருந்து துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றது
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 4,999 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.61 சதவீதம் அதிகரித்து,68.73 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பைசா 16 பைசா அதிகரித்து, 87.72 ரூபாயாக இருந்தது.

