பங்கு சந்தை நிலவரம்: முதலில் ஊசலாட்டம், பிறகு ஏற்றம்
பங்கு சந்தை நிலவரம்: முதலில் ஊசலாட்டம், பிறகு ஏற்றம்
UPDATED : செப் 04, 2025 10:29 AM
ADDED : செப் 04, 2025 02:24 AM

முதலில் ஊசலாட்டம், பிறகு ஏற்றம்
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஒருபுறம் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்ந்த போதிலும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கைகொடுப்பதால், வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து சந்தையில் ஊசலாட்டம் நிலவியது.
ஜி.எஸ்.டி., கவுன்சில்கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அது தொடர்பான எதிர்பார்ப்பு காரணமாக நுகர்பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால், நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி உயர்வுடனும்; ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் சரிவுடனும் முடிவடைந்தன. பெரும்பாலான ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு
2நுகர்பொருட்கள் சார்ந்த பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,666 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.52 சதவீதம் குறைந்து, 68.09 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 13 பைசா அதிகரித்து, 88.02 ரூபாயாக இருந்தது.