sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இனிப்பு பாப்கார்னுக்கு இனி 18% ஜி.எஸ்.டி., குடிநீர், சைக்கிள், நோட்டு புத்தக வரி குறைப்பு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை

/

இனிப்பு பாப்கார்னுக்கு இனி 18% ஜி.எஸ்.டி., குடிநீர், சைக்கிள், நோட்டு புத்தக வரி குறைப்பு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை

இனிப்பு பாப்கார்னுக்கு இனி 18% ஜி.எஸ்.டி., குடிநீர், சைக்கிள், நோட்டு புத்தக வரி குறைப்பு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை

இனிப்பு பாப்கார்னுக்கு இனி 18% ஜி.எஸ்.டி., குடிநீர், சைக்கிள், நோட்டு புத்தக வரி குறைப்பு ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை


ADDED : டிச 21, 2024 11:02 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்சால்மர்:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 55ஆவது கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காப்பீடு பிரீமியத்துக்கு வரிவிலக்கு வழங்குவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மேலும் புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 35% ஜி.எஸ்.டி., விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. பாப்கார்ன் மீதான வரிவிகிதங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் பலவற்றுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

காத்திருக்கும் காப்பீடு

மருத்துவ, ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. பல மாநில அரசுகளின் வருவாய் இழப்பு கருதி, இன்னும் முடிவை அறிவிக்கவில்லை என ஜி.எஸ்.டி., சீராய்வு அமைச்சர்கள் குழுவின் தலைவரான, பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார். மேலும், 148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., மாற்றியமைப்பு குறித்த பரிந்துரையும் நேற்றைய கூட்டத்தில் வைக்கப்படவில்லை என்றார் அவர்.



காத்திருக்கும் காப்பீடு


மருத்துவ, ஆயுள் காப்பீடு பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. பல மாநில அரசுகளின் வருவாய் இழப்பு கருதி, இன்னும் முடிவை அறிவிக்கவில்லை என ஜி.எஸ்.டி., சீராய்வு அமைச்சர்கள் குழுவின் தலைவரான, பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார்.
மேலும், 148 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., மாற்றியமைப்பு குறித்த பரிந்துரையும் கூட்டத்தில் வைக்கப்படவில்லை என்றார் அவர்.








      Dinamalar
      Follow us