அரிசி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் 26 நாடுகளுடன் பேச்சு
அரிசி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் 26 நாடுகளுடன் பேச்சு
ADDED : அக் 26, 2025 01:28 AM

புதுடில்லி: பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பிரிட்டன் உள்ளிட்ட 26 நாடுகளுக்கு, அரிசி ஏற்றுமதியை அதிகரிக்க, ஏ.பி.இ.டி.ஏ., எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கவுன்சில் தலைவர் அபிஷேக் தேவ் தெரிவித்துள்ளதாவது:
கடந்த செப்டம்பரில் அரிசி ஏற்றுமதி 33.18 சதவீதம் அதிகரித்து, 8,140 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், அரிசி ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்து, 49,544 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. 26 நாடுகளின் சந்தைக்கு அரிசி ஏற்றுமதியை விரிவுபடுத்த உள்ளோம்.
இதில், சவுதி அரேபியா, வியட்நாம், ஈராக், அமெரிக்கா, மலேஷியா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில், தென் ஆப்ரிக்கா, பெல்ஜியம், ஜப்பான், ஜெர்மனி, கென்யா ஆகியவை அடங்கும்.
தற்போது இந்த நாடுகள், நம் போட்டியாளர்களான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளரான இந்தியா, தற்போது 172 நாடுகளுக்கு அரிசியை வினியோகித்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டில்லி, பாரத் மண்டபத்தில் வரும் 30,31ல் 'பாரத் சர்வதேச அரிசி மாநாடு 2025' நடைபெறுகிறது மாநாட்டில் 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்கேற்பு 80 நாடுகளை சேர்ந்த 1,000 வெளிநாட்டு வர்த்தகர்கள், 2,500 ஏற்றுமதியாளர்கள் வரவுள்ளனர்

