'வர்த்தகர், அதிகாரி இடையே இரும்புத்திரை தேவையில்லை'
'வர்த்தகர், அதிகாரி இடையே இரும்புத்திரை தேவையில்லை'
ADDED : அக் 25, 2025 12:12 AM

காஸியாபாத்: நேர்மையாக வரி செலுத்துவோரிடம் மென்மையாகவும், கருணையுடனும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் காஸியாபாதில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., பதிவுகளை விரைவுபடுத்த, புதிய தொழில்நுட்பங்களை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். வர்த்தக ஏற்பாட்டு நடவடிக்கைகளை தானாக முன்வந்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எடுக்க வேண்டும். வர்த்தகர் மற்றும் அதிகாரிகள் இடையே இரும்புத்திரை ஏதும் தேவையில்லை. எங்கு சிரமம் இருக்கிறது என்று இருதரப்புமே புரிந்து கொள்ள இயலும். பிரச்னையை மேலும் குழப்பாமல், பெரிதாக்காமல் பொறுமையை கையாள வேண்டும்.
புகாருக்கு உள்ளான வருமான வரி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து முடிப்பதன் வாயிலாக, தவறு செய்யும் மற்றவர்களுக்கு தெளிவான தகவல் சென்றடையும்.
நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் கட்டமைப்பில் பங்களிப்பவர்கள் என்பதால், அவர்களிடம் மென்மையாகவும், கருணையுடனும் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். இதற்காக வகுக்கப்பட்டுள்ள, எஸ்.ஓ.பி., எனப்படும் நிலையான இயக்க நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி., என்பது வெறும் வரிவிகிதம், அடுக்குகள், எளிமை தொடர்பானது மட்டுமல்ல; வரி செலுத்துவோர் அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ள செய்வதாக இருக்க வேண்டும்

