உணவு பதப்படுத்துதல் அதிக சலுகைகளுடன் தயாராகும் தமிழக அரசின் தொழில் கொள்கை
உணவு பதப்படுத்துதல் அதிக சலுகைகளுடன் தயாராகும் தமிழக அரசின் தொழில் கொள்கை
ADDED : டிச 12, 2025 01:43 AM

சென்னை, தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 30 சதவீதம் வரை மூலதன மானியம், மின் கட்டண விலக்கு உள்ளிட்ட பல சலுகைகளுடன் தொழில் கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதற்கான வரைவு கொள்கையை டி.என்.எபெக்ஸ் நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் ஆண்டுக்கு சராசரியாக, 1.30 கோடி டன் உணவு தானியங்களையும், 1.50 கோடி டன் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உற்பத்தி செய்கிறது. எனவே, தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு சலுகைகளுடன் கூடிய உணவு பதப்படுத்தும் தொழில் கொள்கையை தமிழக அரசு வெளியிட உள்ளது.
இதற்கு முன் கடந்த, 2018ல் கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், விழுப்புரம் திண்டிவனம், தேனி, திருச்சி மணப்பாறையில், 'சிப்காட்' மாபெரும் உணவு தொழில் பூங்காக்களை அமைத்துள்ளதால் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு கூறினார்.
முக்கிய அம்சங்கள்
தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, 25 - 30 சதவீதம் மூலதன மானியம்
50 சதவீத சலுகை விலையில் தொழில் மனைகள்
5 ஆண்டுகளுக்கு மின்சார வரி மற்றும் பத்திரப் பதிவு கட்டணத்தில் விலக்கு
அதிகமானோருக்கு வேலை வழங்கும் நிறுவனத்துக்கு ஊதிய மானியம், திறன் மேம்பாட்டு பயிற்சி மானியம்

