ADDED : அக் 29, 2025 03:12 AM

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாக பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ், 5,532 கோடி ரூபாய் முதலீட்டில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஐந்து திட்டங்கள் வாயிலாக, 77 சதவீத முதலீட்டை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது மத்திய அரசு கொண்டு அபரிமிதமான அக்கறையை இது வெளிப்படுத்துகிறது.
பல ஆயிரம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள பிரதமர் மோடிக்கும், அதற்கு உறுதுணையாக திகழும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் நன்றி. பிரதமர் மோடியால், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் மிளிருகிறது தமிழகம்.
-நயினார் நாகேந்திரன்
தமிழக பா.ஜ., தலைவர்

