எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம்
எல்க்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம்
UPDATED : நவ 06, 2026 07:05 PM
ADDED : நவ 05, 2026 04:24 PM
நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு கிட்டத்தட்ட 1.90 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தமிழ்நாடு ஸ்டார்டப் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாநிலத்தின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதிய தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி கிட்டத்தட்ட இருமடங்காகி உள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஒவ்வொரு 950 ரூபாய்-க்கும், 380 ரூபாய் தமிழகத்தில் இருந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சர்வதேச மையமாக தமிழகம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டை பொறுத்தவரை, நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதம் தமிழகத்தின் பங்காக உள்ளது. இதன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தற்போது உருவாக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு செயற்கை தொழில்நுட்பம் என்பது இன்றியமையாததாக உள்ளது.
- சிங்கை ஜி.ராமசந்திரன், சி.இ.ஓ., டான்சிம்.
நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் ஒவ்வொரு1000 ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களிலும் தமிழகத்தின் பங்கு 400 ரூபாய் ஆகும்.
