ADDED : ஜன 17, 2025 11:17 PM

சென்னை:உலகின் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள இரண்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு பேச்சு நடத்தி வருகிறது.
மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்கவும்; கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், மாநல்லுாரில், மின்சார வாகனங்களுக்கான தொழில் பூங்காவை அமைத்து வருகிறது.
அங்கு முதலீடு செய்ய வருமாறு, உலகில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள இரண்டு நிறுவனங்களுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது.
இந்த இரு நிறுவனங்களும், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, டெஸ்லா, ஓலா உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு பேட்டரி சப்ளை செய்கின்றன.