ADDED : அக் 01, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன் : நெதர்லாந்தில் உள்ள தன் ஆலையில், மாசு வெளியீட்டை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல் கையெழுத்திட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் புதுமை கண்டுபிடிப்பு நிதியான 30 கோடி யூரோ, அதாவது 3,150 கோடி ரூபாயுடன் நெதர்லாந்தில் காற்று மாசு குறைக்க அந்நாட்டு அரசு கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாயை ஒதுக்க முன்வந்துள்ளது.
இந்த நிதியில், தன் பங்கு வாயிலாக, காற்று மாசு குறைக்கும் ஒப்பந்தத்தில் இணைந்திருப்பதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக மாசு ஏற்படுத்தும் பர்னான்ஸ், நிலக்கரி சுரங்க ஆலைகள் ஆகியவற்றை கண்காணித்து, காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.