ADDED : பிப் 08, 2025 09:59 PM

புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பதிவு செய்யப்பட்ட வாகன உடைப்பு மையத்தை அசாமில் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குவஹாத்தியில் ஆக்சம் பிளாட்டினம் நிறுவனத்துடன் இணைந்து, இந்த வாகன உடைப்பு மையத்தை துவங்கியுள்ளதாகவும்; இந்த ஆலை ஆண்டுதோறும் 15,000 பழைய வாகனங்களை உடைக்கும் திறன் கொண்டது எனவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆலை, அனைத்து வகையான பயணியர் மற்றும் வணிக வாகனங்களை உடைக்கும் வசதியை கொண்டுள்ளது. ஏற்கனவே, ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சூரத், சண்டிகர், டெல்லி என்.சி.ஆர்., மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில் வாகன உடைப்பு மையங்களை டாடா மோட்டார்ஸ் அமைத்து உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஏழு மாநிலங்களில் உள்ள தங்கள் வாகன உடைப்பு மையங்களின் வாயிலாக, ஆண்டுக்கு மொத்தம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை அகற்றும் திறனை பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

