UPDATED : நவ 10, 2026 12:00 AM
ADDED : நவ 09, 2026 10:24 PM

புதுடில்லி: சொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் தொடங்கியுள்ள ‘டெம்பிள்’ என்ற புதிய, அணியக்கூடிய சாதனம் தயாரிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனம், மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திஉள்ளது.
கிட்டத்தட்ட 85,000 ரூபாயில் அறிமுகமாகியுள்ள இந்த சாதனம், மூளையின் ரத்த ஓட்டம் உள்ளிட்ட உடலியல் மாற்றங்களை கண்காணிக்கும் என கூறப்படும் நிலையில், அதன் அறிவியல் ஆதாரங் கள் குறித்து மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் போதுமான அறிவியல் ஆதாரங்களை கொண்டிருக்கவில்லை என மருத்துவர்கள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, மூளையின் ரத்த ஓட்டம், உடலியல் செயல்பாட்டு அளவீடுகள் மற்றும் முதுமை தொடர்பான தகவல்களை வழங்கும் அதன் திறன் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோயலுக்கும் மருத்துவர்கள் சிலருக்கும் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள கோயல், 'டெம்பிள்' ஒரு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு கருவி மட்டுமே என்றும், இது மருத்துவ சாதனம் அல்ல என்றும் விளக்கம் அளித் துள்ளார்.
