ADDED : டிச 23, 2024 12:41 AM

வங்கி, மியூச்சுவல் பண்டு, பங்குகள், காப்பீடு போன்ற கணக்குகளில் 'நாமினி' எனப்படும் நியமனதாரரை நியமிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா லோக்சபாவில் கடந்த 3ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏன் இந்த சட்ட திருத்தம்?
சொத்தின் உரிமையாளர் தனது கணக்கில் ஒரு நாமினியை சேர்ப்பது இப்போதுள்ள நடைமுறை. ஆனால், சில நேரங்களில், உரிமையாளர் உயிரிழப்பதற்கு முன், நாமினி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் உரிமையாளரின் கணக்குகளில் உள்ள தொகையைப் பெறுவதில் குடும்பங்கள் பெரும் சட்ட சிக்கலை எதிர்கொள்கின்றன. சட்டப் பிரச்னை வரக்கூடும் என்பதால், வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களும், தொகையை யாரிடம் வழங்குவது என முடிவெடுக்க இயலாமல், கைவிரித்து விடுகின்றன.
சட்ட திருத்தம் சொல்வதென்ன?
அதிகபட்சம் 4 நாமினிகள் நியமிக்கலாம்
சொத்து நாமினிகள்
மியூச்சுவல் பண்டு 3
டிமேட் 3
காப்பீடு 3
வங்கி கணக்கு 4
ஒரே நாமினியும் இல்லாமல் போனால்?
சொத்துகளை மாற்றுவதில் சிரமம்
சட்ட சிக்கலால் ஏற்படும் நீண்ட கால தாமதம்
உரிமை கோராத தொகை வங்கிகளில் அதிகரிப்பு
குடும்பங்களில் தகராறுகள், குழப்பங்கள்
உரிமை கோராத தொகையை, 7 ஆண்டு களுக்குப் பிறகே, முதலீட்டாளர்கள் கல்வி, விழிப்புணர்வு நிதிக்கு மாற்ற முடியும் என்பதால், பராமரிப்பதில் வங்கிகளுக்கு சிக்கல்
உரிமை கோராத சொத்துக்கள்
2023 - ரூ.62,225 கோடி
2024 - ரூ.78,213 கோடி
சிக்கலும் தீர்வும்
சிக்கல்:
உரிமையாளர் மறைவுக்கு முன் நாமினி மறைந்துவிடும் சூழலில், வேறு ஒருவரை நாமினியாக மாற்றும் முன் உரிமையாளர் இறக்க நேரிட்டால், அவரது சொத்துக்களை, மகனோ, மகளோ பெறுவதில் சட்டச்சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
தீர்வு:
1) மனைவி நியமனதாரர் என்ற வகையில் உரிமையாளர் மரணமடைந்தால், 100 சதவீத தொகையையும் மனைவி பெறுவார். கணவருக்கு முன் மனைவி இறக்க நேரிட்டால், அடுத்த நாமினியாக மகன் கருதப்படுவார். ஒருவேளை தாய், மகன் இருவரும் உயிரிழந்தால், மகள் நாமினியாக கருதப்படுவார்.
2) தனது சொத்துக்களுக்கு மனைவி (50%), மகன் (25%), மகள் (25%) என 3 நாமினிகளை உரிமையாளர் பதிவு செய்கிறார். கணவரின் மறைவுக்கு பிறகு மூவருக்கும் அவரவருக்குரிய பங்கு வழங்கப்படும். கணவர் இறப்பதற்கு முன் நாமினிகள் மூவரில் யார் இறந்தாலும், அவருக்குரிய பங்கு, மற்ற இருவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

