ADDED : ஏப் 28, 2025 12:39 AM

1.45
கடந்த மார்ச்சில் நாட்டின் விமான பயணியரின் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பயணம் செய்த 1.33 கோடி பயணியரைக் காட்டிலும் 8.79 சதவீதம் அதிகம் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துஉள்ளது.
17,425
கடந்த வாரம் அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளில் 17,425 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஏப்ரல் 18ம் தேதியுடன் முடிவுஅடைந்த முந்தைய வாரத்தில், 8,500 கோடி ரூபாய் நிகர முதலீட்டைத் தொடர்ந்து இந்த முதலீடு நடந்துள்ளது.
555
மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், எஸ்.எம்.எல்., இசுசு நிறுவனத்தின் 58.96 சதவீத பங்குகளை, பங்கு ஒன்று 650 ரூபாய் என்ற விலையில், 555 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடன் இப்பரிவர்த்தனை முடிவடையும் என கூறப்படுகிறது.

