ADDED : மே 17, 2025 12:23 AM

13,221
கோடி ரூபாய் மதிப்பிலான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 7.10 கோடி பங்குகளை, விற்பனை செய்திருப்பதாக சிங்கப்பூரை சேர்ந்த 'சிங்டெல்' நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சிங்டெல் வசமுள்ள பார்தி ஏர்டெல் பங்குகள், 29.50 சதவீதத்தில் இருந்து 28.30 சதவீதமாக குறைந்துள்ளது.
282
நிறுவனங்களை திவால் நடவடிக்கையில் இருந்து, கடந்த 2024 - -25ம் நிதியாண்டில், கடன் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், மீட்டெடுத்து இருப்பதாக, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் தரவு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, கடன் வழங்கிய நிறுவனங்கள் 67,000 கோடி ரூபாயை மீட்டுள்ளன.
7.65
கோடி பேர், 'அடல் பென்சன் யோஜனா' திட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் வரை இணைந்துள்ளனர். கடந்த 2015 ஜூனில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கத்துடன் இது துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 45,974.67 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
28.66
மில்லியன் டன் கோதுமை, நடப்பு 2025 - -26ம் சந்தைப்படுத்தல் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2024 - -25ம் ஆண்டில், மொத்தம் 26.59 பில்லியன் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.