ADDED : ஜூலை 25, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
20,000
புதிய உற்பத்தி பிரிவுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஐ.டி.சி., நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, அதன் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்துள்ளார். எட்டு புதிய உற்பத்தி பிரிவுகளை ஐ.டி.சி., ஏற்கனவே நிறுவியுள்ளது. இதன் மதிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இம்முதலீடுகள் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
650
எம் அண்டு பி இன்ஜினியரிங் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 650 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு பங்கின் விலையை 366 முதல் 385 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இதற்கான பங்கு விற்பனை, ஜூலை 30ல் துவங்கி, ஆகஸ்ட் 1ம் தேதி முடிவடைகிறது.