ADDED : ஆக 26, 2025 12:40 AM

803
ஸ்டீல் உற்பத்தி மற்றும் உருக்கு வணிகத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய நிறுவனமான 'பி.எம்.டபிள்யு., இண்டஸ்ட்ரீஸ்' ஜார்க்கண்ட் மாநிலத்தில் 803 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதை கொண்டு, ஆண்டுக்கு 5 லட்சம் டன் உற்பத்தியாகும் வகையில் புதிய வசதி அமைக்கப்பட உள்ளதாகவும்; வாகனம், உள்கட்டமைப்பு துறைகளுக்கு தேவையான அதி நவீன ஸ்டீல் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2,800
பொதுத்துறை மின்சார உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., அணுசக்தி உற்பத்தியில் நுழைய உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில், 2,800 மெகாவாட் திறன் கொண்ட அணுசக்தி உற்பத்தி வசதிக்கு, அடுத்த மாதம் அடிக்கல் நாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40
வேலை பார்க்கும் பெண்களின் விகிதம், கடந்த ஏழு ஆண்டுகளில் இருமடங்காகி உள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 - 18 நிதியாண்டில் 22 சதவீதத்திலிருந்து 2023 - 24 நிதியாண்டில் 40.30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் பெண்களின் வேலையின்மை விகிதம் 5.60 சதவீதத்திலிருந்து 3.20 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 7 ஆண்டுகளில் வேலை பார்க்கும் பெண்கள் எண்ணிக்கை, கிராமப்புறங்களில் 96 சதவீதமும்; நகர்ப்புறங்களில் 43 சதவீதமும் அதிகரித்துள்ளது.