ADDED : ஜூலை 08, 2026 01:13 AM

320
வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான யுனோ மிண்டா, நான்கு சக்கர வாகன சீட் தயாரிப்பு ஆலையை, 320 கோடி ரூபாய் முதலீட்டில் மஹா.,வில் அமைக்க உள்ளது.
1,55,229
மேற்காசிய நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, அவசரகால கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் தொகையின் மொத்த மதிப்பு 1,55,229 கோடி ரூபாயை கடந்துள்ளது.
9,768
ஜெர்மனி நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், நடப்பு அரையாண்டில் 9,768 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 9 சதவீத உயர்வாகும்.
43,000
கடந்த நிதியாண்டில், யுனைட்டெட் புரூவரிஸ் நிறுவனம், நாட்டின் பொருளாதாரத்துக்கு 43,000 கோடி ரூபாய் பங்களித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வரியாக மட்டும் 30,600 கோடி ரூபாயை இந்நிறுவனம் செலுத்தியது.
12.7
நாட்டின் வாகன உதிரிபாக துறை கடந்த நிதியாண்டில், 12.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், ஏற்றுமதி 5 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
