தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி

 எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூலை 09, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

7

மழை குறைந்ததாலும் தேவை அதிகரித்ததாலும் கடந்த ஜூன் மாதத்தில் சர்க்கரை விலை 6 முதல் 7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சர்க்கரை ஆலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

9,076



ஆந்திர பிரதேச அரசின் முதலீட்டு மேம்பாட்டு வாரியம் 9,076.11 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்ட வரைவுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்வாயிலாக சுமார் 10,531 பேருக்கு வேலை கிடைக்கும்.

1,400



நாட்கோ பார்மா நிறுவனம் அட்காக் இன்கிராம் ஹோல்டிங்ஸ் புரப்பரியேட்டரி நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்க 1,400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.

5,54,000



தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஏ.ஐ., மெமரி சிப் விற்பனை ஏப்.,- ஜூன் வரையிலான காலாண்டில் 1,800 சதவீதம் உயர்ந்து, 5.54 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என கணித்துள்ளது.

7,17,00,00,000



கடந்த ஜூன் நிலவரப்படி, நாட்டின் எத்தனால் வினியோகம் 717 கோடி லிட்டர். இது ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 1,048 கோடி லிட்டர் அளவில் 68% என டிஸ்டில்லர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us