தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூலை 10, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2047

இந்தியா, வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக உருவெடுக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

17,457

பருத்தி நுால் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ் லிமிடெட், பால்கன் யார்ன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, தன் உற்பத்தி திறனை 7,700 டன்னில் இருந்து 17,457 டன்னாக உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

2,00,000

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம், உள்நாட்டு வாகன சந்தையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

95

இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு, நான்கு ஆண்டுக்குள் 95 லட்சம் கோடி ரூபாயை தொடும் என ரெட்ஸீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,200

இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆதரவு பெற்ற வெஞ்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான பண்டமென்டம், 2,200 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட இலக்கு நிர்ணயித்துஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us