ADDED : ஜூலை 26, 2026 02:12 AM

51.50
நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை கடந்த 20 நாட்களில் 51.50 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, 68.21 அமெரிக்க டாலரிலிருந்து 103.33 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
9,500
கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் 9,500 கோடி ரூபாய் அபராதம் விதித்ததால், ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக இறக்குமதி வரி விதிக்கப்படுமென அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
47.50
அமெரிக்காவின் என்விடியா மற்றும் தென் கொரியாவின் எஸ்.கே., குழுமம் இணைந்து, 47.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஏ.ஐ., சார்ந்த தரவு தளத்தை தென் கொரியாவில் அமைப்பதாக அறிவித்துள்ளன.
5,00,000
பீகார் மாநில அரசு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 சர்க்கரை ஆலைகளை 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க உள்ளது.
19,00,000
தென் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், அமெரிக்காவின் பிராட்காம் நிறுவனத்திற்காக 19 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆண்டுகளில் அதிநவீன சிப் தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளது.
