நம் நாட்டில் 100 கோடியை கடந்தது பிராட்பேண்டு பயனர் எண்ணிக்கை
நம் நாட்டில் 100 கோடியை கடந்தது பிராட்பேண்டு பயனர் எண்ணிக்கை
UPDATED : ஜன 02, 2026 01:49 AM
ADDED : ஜன 02, 2026 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவில் பிராட்பேண்டு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு நவம்பர் மாத நிலவரப்படி 100 கோடியை தாண்டியுள்ளதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
3ஜி, 4ஜி, 5ஜி மொபைல் டேட்டா வை - பை மற்றும் பைபர் ஆகிய அதிவேக இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களே, பிராட்பேண்டு சந்தாதாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 99.98 கோடியாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை, நவம்பரில் 100.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொபைல் டேட்டா பயனர்களின் மாதாந்திர சராசரி இணைய பயன்பாடு 24 ஜி.பி.,யாக அதிகரித்துள்ளதாகவும், சர்வதேச அளவில் இதுவே மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

