UPDATED : நவ 10, 2026 04:33 PM
ADDED : நவ 10, 2026 04:01 PM

1. பருத்தி மூட்டைகள் கொண்டு செல்லவதற்கு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள கூட்டுறவு நுாற்பாலைக்கு பருத்தி மூட்டைகளை கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த மதிப்பு: ரூ.50 லட்சம்
கடைசி நாள்: நவ.20, காலை 11:00 மணி
ஒப்பந்த எண்: 2026_CoT_724197_1
2. கால்நடை தீவன மூலப்பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு, கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், தாதுப்பொருட்கள் வழங்க நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த மதிப்பு: ரூ.40 லட்சம்
கடைசி நாள்: நவ.23, பிற்பகல் 3:00 மணி
ஒப்பந்த எண்: 2026_TNVAS_724210_1
3. குடிநீர் திட்ட பராமரிப்புக்கு ஒப்பந்தம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரித்தல், பழுதுகளை சரிசெய்தல், நீர் சுத்திகரிப்புக்கு தேவையான ரசாயனங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது.
பணிக்காலம்: 27 மாதங்கள்
ஒப்பந்த மதிப்பு: 14.20 கோடி முதல் 16.50 கோடி ரூபாய் வரை
கடைசி நாள்: டிச.7, பிற்பகல் 3:00 மணி
ஒப்பந்த எண்கள்: 2026_TWAD_724234_1, 2026_TWAD_724226_1, 2026_TWAD_724247_1, 2026_TWAD_724245_1
