தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சக்கரம்

சக்கரம்

சக்கரம்


UPDATED : நவ 02, 2026 04:29 PM

ADDED : நவ 02, 2026 04:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 04:29 PM ADDED : நவ 02, 2026 04:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் விற்பனை



55.58 சதவீதம் உயர்வு



ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் அக்டோபர் மாத நிகர விற்பனை வருவாய் 647.05 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 55.58 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் மாதாந்திர வருவாய் தொடர்ந்து நான்காவது மாதமாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வாகன துறை தேவையும், சக்கர உற்பத்தி விற்பனையும் வருவாய் உயர்வுக்கு ஆதரவாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய டிரக், பஸ் டயரை



அறிமுகப்படுத்திய மிச்செலின்



மிச்செலின் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய 'எக்ஸ் மல்டி எனர்ஜி இசட்2' டிரக் மற்றும் பஸ் டயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சாலை மற்றும் இயக்க சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வர்த்தக வாகனங்களில் நீண்ட தூர இயக்கம் மற்றும் எரிபொருள் செயல்திறனை கருத்தில் கொண்டு இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முதலீட்டை அதிகரிக்க



சோனா காம்ஸ்டார் திட்டம்



சோனா காம்ஸ்டார் நிறுவனம், வர்த்தக விரிவாக்கத்துக்கு ஏற்ப ஆண்டுதோறும் மேற்கொள்ளும் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவனம் ஆண்டுக்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி திறன் விரிவாக்கம் மற்றும் புதிய தொழில்நுட்ப திறன்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்படும் என நிர்வாக இயக்குனர் மற்றும் குழும தலைமை செயல் அதிகாரி விவேக் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

மதர்சன் சுமி வயரிங் லாபம்



35 சதவீதம் உயர்வு



மதர்சன் சுமி வயரிங் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 223 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 46.70 சதவீதம் அதிகரித்து 4,054 கோடி ரூபாயை எட்டியுள்ளது. வாகன உற்பத்தி துறையில் வயரிங் மற்றும் தொடர்புடைய உதிரிபாகங்களுக்கான தேவை உயர்வு வருவாய் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தது.

டி.வி.எஸ்., அக்டோபர் வாகன வினியோகம்



7 லட்சத்தை கடந்தது



டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் அக்டோபர் மாத வாகன வினியோகம் 7,00,134 எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 29 சதவீதம் அதிகமாகும். இதில் மின்சார இருசக்கர வாகன வினியோகம் 71,382 எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. பண்டிகை கால தேவை மற்றும் பல்வேறு வாகன பிரிவுகளில் ஏற்பட்ட விற்பனை உயர்வு மொத்த வினியோக வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us