டி.என்.அபெக்ஸ் பணிகள் முடக்கம் சி.இ.ஓ., இல்லாமல் தள்ளாடுகிறது
டி.என்.அபெக்ஸ் பணிகள் முடக்கம் சி.இ.ஓ., இல்லாமல் தள்ளாடுகிறது
UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 11:14 PM
சென்னை: கடந்த மூன்று மாதங்களாக டி.என். அபெக்ஸ்., நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி இல்லாததால் விவசாயிகள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், புதிய திட்டங்களை செயல்படுத்துவது, ஏற்றுமதிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன.
தமிழகத்தில், உணவு பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய உணவு பதப்படுத்தும் தொ ழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணியை தமிழக அரசின் டி.என்.அபெக்ஸ் எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் மேற்கொள்கிறது .
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்த பொறுப்பில் இருந்த அழகுசுந்தரம், கடந்த ஆகஸ்டில் ஓய்வுபெற்றார்.
புதிய தலை மை செயல் அதிகாரி இதுவரை, நியமிக்கப்படவில்லை. இதனால், உணவு தொழில் நிறுவனங்களுக்கான பணிகள் முடங்கியுள்ளன. எனவே, விரைவாக தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தொழில்முனைவோரிடம் எழுந்துள்ளது.
