தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/துவரம் பருப்பு இறக்குமதி 44% உயர்வு

துவரம் பருப்பு இறக்குமதி 44% உயர்வு

துவரம் பருப்பு இறக்குமதி 44% உயர்வு


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்த ஜன., முதல் ஆக., வரையான எட்டு மாதங்களில் துவரம் பருப்பு இறக்குமதி கடந்தாண்டை விட 44 சதவீதம் அதிகரித்துள்ளது என, இந்திய பயறு மற்றும் தானிய சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது:

கடந்தாண்டு ஜன., முதல் ஆக., வரை 4.34 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், இதே காலகட்டத்தில் நடப்பாண்டில் 6.25 லட்சம் டன் இ றக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 44 சதவீதம் அதிகமாகும்.

துவரை உற்பத்தியில் முக் கிய பங்கு வகிக்கும் கர்நாடகா, மஹா., வில் காரீப் பருவத்தில் மழை பற்றாக்குறையால் துவரை சாகுபடி குறையும் என்ற காரணத்தால் இறக்குமதி உயர்ந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச மற்றும் உள்நாட்டு துவரம் பருப்பு விலை குறைந்தே காணப்படுகிறது. குவின்டாலுக்கு 200 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஏற்கனவே பண்டிகை கால தேவைக்கான துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் துவரம் பருப்பின் தேவை அதிகரிக்கும் என்பதால், தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஜன.,–ஆக., வரை துவரை இறக்குமதி (டன்னில்)

மியன்மர் : 1.5 லட்சம்

மொசாம்பிக் : 2.29 லட்சம்

தான்சானியா : 1.10 லட்சம்

சூடான் : 71,808

பிற நாடுகள் : 61,138

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us