திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பொது
வர்த்தக துளிகள்
ADDED : மார் 20, 2025 11:47 PM
ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக, இந்திரனில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பட்டாச்சார்யா, பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறையைக் கவனிப்பார் என்றும்; இந்நியமனம் இம்மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு பெற்றுள்ள பட்டாச்சார்யா, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும், இவர் இதற்கு முன் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை துறையின் ஆலோசகராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ காப்பீட்டில் இணைந்து செயல்படும் நோக்கில், பிரிட்டனை தளமாகக் கொண்ட புரூடென்ஷியல் பி.எல்.சி., நிறுவனம், எச்.சி.எல்., குழுமத்தின் துணை நிறுவனமான 'வாமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ்' உடன் கைகோர்த்துஉள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்படுவதற்கு உட்பட்டு, இந்த கூட்டு முயற்சியில், பிரிட்டனின் புரூடென்ஷியல் பி.எல்.சி., நிறுவனத்தின் துணை நிறுவனமான புரூடென்ஷியல் குரூப் ஹோல்டிங்ஸ் 70 சதவீத பங்குகளையும், மீதமுள்ள 30 சதவீத பங்குகளை வாமா வைத்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரூடென்ஷியல் நிறுவனம், இந்தியாவில் ஐ.சி.ஐ.சி.ஐ., குழுமத்துடன், ஆயுள் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை வணிக துறையில் கூட்டு வணிகத்தில் ஏற்கனவே ஈடுபட்டு உள்ளது.
அசோக் லேலாண்டு நிறுவனம், டீசல், மின்சார பேருந்துகள் உற்பத்திக்கான புதிய ஆலையை ஆந்திராவில் திறந்துள்ளது.இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலாண்டு நிறுவனம், ஆந்திராவின் விஜயவாடா அருகே உள்ள மாலவள்ளியில், டீசல் மற்றும் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை திறந்துஉள்ளது. ஆண்டுக்கு 4,800 பேருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் இங்கு, கற்றல் மையம் மற்றும் சேவை பயிற்சி மையம் உள்ளிட்டவையும் உள்ளன. வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கற்றல் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.